சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன் கைது!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்து, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

இந்த நிலையில், சிறுமியை கர்ப்பவதி கிளினிக்கிற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமியின் வயதினை அறிந்த சட்டவைத்திய அதிகாரிகள் சிறுமி கர்ப்பமானது தொடர்பிலான பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த சிறுமி 7 மாத கர்ப்பமாக காணப்பட்டுள்ளார். சிறுமி பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டத்திற்கு முரணான இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இளைஞனை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமியினை சட்டத்திற்கு முரணாக குடும்பமாக வாழ வைத்த சிறுமியின் பெற்றோர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
Previous Post Next Post