பிரான்ஸில் குறுந்தகவல் மூலம் பரவும் புதிய பண மோசடி! மக்களுக்கு எச்சரிக்கை!!

குறுந்தகவல் மூலம் புதிய பண மோசடி ஒன்று பரவி வருவதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பலருக்கு கடந்த சில வாரங்களாக ‘நீங்கள் உங்கள் நஷ்ட்ட ஈட்டுத் தொகையை வழங்குவற்குரிய கால எல்லை நிறைவடைந்துள்ளது. எனவே கீழுள்ள இணைப்பில் ஊடாக மிக விரைவாக கட்டணத்தைச் செலுத்தவும்’ என எழுதப்பட்டு, ஒரு இணைய இணைப்பும் குறுந்தகவல் ஊடாக அனுப்பட்டுவதாகவும், இத்தகைய குறுந்தகவல்கள் முற்றுமுழுதாக ‘மோசடி’ எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாகன தரிப்பிட கட்டணம், தரிப்பிடத்தை மீறிய குற்றத்துக்காக தண்டப்பணம், மின்சாரக்கட்டணம் உள்ளிட்ட பல விதங்களில் இந்த குறுந்தகவல்கள் உலா வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மோசடிகளில் சிக்காமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post