யாழில் வாகனத் திருத்துமிடத்தில் பாரிய தீ விபத்து! (படங்கள்)

யாழ்.தாவடி - வன்னிய சிங்கம் வீதியிலுள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் தீக்கிரையாகியுள்ளது.

வேலைத் தளத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனம் தீ விபத்தில் முழுமையாக எரிந்துள்ளது. வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
Previous Post Next Post