சுவிஸில் பயங்கரம் - தனது மனைவியை கத்தியால் குத்தி கொன்ற ஈழத்தமிழர்! (படங்கள்)

சுவிற்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டமுள்ள சிற்றுண்டிக் கூடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

ஆர்கெவ், கான்டன் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள “பெர்னர்ஸ் எஸ்வெர்க்” என்ற சிற்றுண்டிக் கூடத்தில் இந்த கொலை நிகழ்ந்தது.

உள்ளூர் காவல்துறையின் கூற்றுப்படி, இது ஒரு உறவு குற்றம்.

ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றார். இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கிடையிலான தகராறே கொலையில் முடிந்துள்ளது. 47 வயதான மனைவி கொல்லப்பட்டார். 57 வயதான கணவர் கைதானார்.

நேற்றுப் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தகலறிந்து பொலிசார் அங்கு சென்ற போது, பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்தார். அவரை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கணவன் எதிர்ப்பின்றி பொலிசாரிடம் சரணடைந்தார்.
Previous Post Next Post