யாழ்.அத்தியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் -2023

யாழ்ப்பாணம், அத்தியடி அருள்மிகு ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியோற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெறும் மஹோற்சவத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ்ப் புத்தாண்டன்று தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

அதேநேரம் சோபகிருது புத்தாண்டுச் சிறப்புப் பூசைகள் 14 ஆம் திகதி தேர்த் திருவிழா அன்று பிற்பகல் 2.03 மணிக்கு நடைபெறும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post