பற்றி எரியும் பாரிஸ்! தம்பதியர் செய்த செயல்: இணையத்தில் வைரலான காட்சி!! (வீடியோ)

பிரான்சில் ஓய்வு பெறும் வயதை ஜனாதிபதி மக்ரோன் அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.

இந்நிலையில், பாரீஸில் ஒரு உணவகத்தின் அருகே போராட்டக்காரர்கள் எதற்கோ தீவைக்க, அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல் ஒரு தம்பதி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சி வைரலாகியுள்ளது.

எரியும் அந்தப் பொருள் அவ்வப்போது பட் பட் என வெடிக்கும்போதும், அந்தத் தம்பதி அதைக் குறித்து திடுக்கிட கூட இல்லை.

அவர்கள் இருவரும் இப்படி பேசிக்கொண்டிருக்க, அடுத்த மேசையில் இன்னொரு ஜோடியும் வந்து அமர்கிறது. அவர்கள் உட்பட, அங்கு உட்கார்ந்திருப்பவர்களோ, அந்த வழியே நடந்து செல்பவர்களோ, அந்த தீயைக் குறித்து கொஞ்சம் கூட பதற்றப்பட்டதுபோலவே தெரியவில்லை.

தீப்பற்றி எரிய, சகஜமாக மக்கள் நடமாடுகிறார்கள்.

இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளதுடன், இதுதான் பிரான்ஸ்காரர்கள், அவர்களுக்கு எல்லாமே ஓகேதான் என ஒரு மீமும் உருவாகியுள்ளதாம்.
Previous Post Next Post