யாழில் 31 வயதான இளம் அரச உத்தியோதக்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம், கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் கைதடி வைத்திய சாலையில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கிராம சேவையாளர் ஒருவரின் புதல்வியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கைதடி வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சூரியகுமார் வாசுகி (வயது - 31) என்ற இளம் அரச உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post