மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
அதற்கமைய இன்று (01.03.2023) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் (புதிய விலை 305 ரூபா) குறைக்கப்படுவதோடு தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை 134 ரூபாவினால் (புதிய விலை 330 ரூபா) குறைக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.