பிரான்ஸில் புதிய மாதத்தில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!

இன்று மார்ச் 1, புதிய மாதத்தில் பிரான்சில் பல புதிய மாற்றங்கள், சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

அந்தவகையில்,

⚠️ தொலைபேசியூடாக வாடிக்கையாளர்களை அழைக்க கட்டுப்பாடு!!

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தொலைபேசியூடாக அழைப்பது தொடர்பில் சில நேரக்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாடிக்கையாளர்களை தொலைபேசியூடாக அழைக்க முடியாது. அதேபோல் கிழமை நாட்களில் காலை 10 மணியில் இருந்து 1 மணி வரையும், பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 8 மணிவரைக்கும் உட்பட்ட நேரத்தில் மட்டுமே அழைப்பெடுக்க முடியும்.

இச்சட்டத்தை மீறும் பட்சத்தில் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

⚠️ கொவிட் 19 பரிசோதனைகளுக்கான இழப்பீட்டில் மாற்றம்!

கொவிட் 19 பரிசோதனை செய்பவர்களுக்கு அரசு வழங்கிவந்த கொடுப்பனவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து உங்களது கொவிட் 19 பரிசோதனைகளில் 60 தொடக்கம் 70 சதவீதமான தொகையை மட்டுமே அரசு அல்லது காப்புறுதி நிறுவனம் வழங்கும்.

⚠️ வங்கிக்கடனுக்கு வட்டி அதிகரிப்பு!!

நீண்டகால வங்கிக்கடன்களுக்கு (20 வருடங்கள் அல்லது அதற்கு மேல்) அறவிடப்படும் வட்டி அதிகரிக்கப்படுகிறது. இதுவரை 3.79 சதவீதம் அறவிடப்பட்டுவந்த வட்டி, பணவீக்கம் காரணமாக இன்று முதல் 4 சதவீதங்களாக அதிகரிக்கப்படுகிறதாக Banque de France அறிவித்துள்ளது.

⚠️ சிகரெட் விலை அதிகரிப்பு!!

இன்று முதல் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படுகிறது.

Philip Morris மற்றும் Marlboro உள்ளிட்ட சில நிறுவனங்களைச் சேர்ந்த சிகரெட் பெட்டிகள் இன்று முதல் 11 யூரோக்களாக அதிகரிக்கப்படுகிறது.
Previous Post Next Post