பிரான்ஸில் கடை வைத்திருக்கும் தமிழர்களைக் குறி வைத்து நடக்கும் மோசடி! (வீடியோ)

பிரான்ஸில் கடை நடத்தும் தமிழர்களைக் குறி வைத்து பண மோசடியில் ஈடுபடும் கறுப்பினக் கும்பல் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

50 யூரோ தந்தால் 150 யூரோ தருவோம் என ஆசை வார்த்தைகள் கூறி குறித்த கும்பல் பல தமிழர்களை ஏமாற்றியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டதுடன், நேற்று முன்தினம் இவ்வாறான மோசடிக்காரர்களினால் கடை உரிமையாளரான தமிழர் ஒருவர் 10 ஆயிரம் யூரோக்களை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக பணம் தருவதென்றால் எளிதில் ஏமாறக் கூடியவர்கள் தமிழர்கள் என்பதை கறுப்பினத்தவர்களும் அறிந்து வைத்திருந்து கடை நடத்தும் தமிழர்களைக் குறி வைத்து இலகுவில் ஏமாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post