யாழ்.நெடுந்தீவில் பயங்கரம்! ஒரே வீட்டில் 5 பேர் வெட்டிக் கொலை!! (படங்கள்)

நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் உள்பட ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 பெண்களும் 2 ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்தே வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.

நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் (ஒருவர் பாண்டியன்தாழ்வு), மற்றொருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் என ஐவரின் சடலங்களே மீட்கப்பட்டன.

மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணிவரை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது நால்வர் சடலமாகக் காணப்பட்டனர். ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டார்.

மற்றொருவர் அறை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நெடுத்தீவுக்குச் சென்றுள்ளனர்.
Previous Post Next Post