கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிராம உத்தியோகத்தர் உட்பட 11 தமிழ் இளைஞர்கள் கைது!

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா நாட்டுக்குச் செல்ல முயற்சித்தவர்களை இன்று (17.05.2023) கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் அடங்குவதுடன், கிராம உத்தியோகத்தரும் உள்ளதாக தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்.

22 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post