வற்றாப்பளை ஆலயத்திலிருந்து திரும்பிய யாழ். இளைஞன் விபத்தில் பலி!

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் யாழ். வரணி பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post