பிரித்தானியாவிலிருந்து கொழும்பு வந்த தமிழ் யுவதி 13 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு! பேஸ்புக் காதலன் கைது!! (படங்கள்)

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் 13 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற யுவதி.

இந்த யுவதி நாளை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் வசித்த இந்த யுவதிக்கு, பேஸ்புக் ஊடாக இலங்கை இளைஞன் ஒருவருடன் காதல் வசப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை வந்துள்ளார். அதற்கு முன்னதாக இணையம் ஊடாக அல்விஸ் மாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பொன்றை முன்பதிவு செய்து பெற்றுள்ளார்.

அந்த வீட்டில் காதலனுடன் தங்கியிருந்தார். காதலன் சட்டக்கல்லூரி மாணவர்.

கலகிஸ்ஸ பதில் நீதவான் திருமதி ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post