புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் ஆலய வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில் மேல் அமர்ந்தவாறு ஊர் சுற்றி வந்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா நேற்றையதினம் மிகவும் சிறப்புற இடம்பெற்றது.
பாரம்பரியமாக வேட்டை திருவிழா இடம்பெறும் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புடைசூழ ஆரம்பித்த வேட்டை திருவிழாவானது வேட்டையாடப்பட்டு யானையில் பிள்ளையார், துர்க்கா வீதி வழியாக வலம் வந்து உலகளந்த பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
இந்த வேட்டை திருவிழாவில் வேடுவர் வேடம் தரித்து அடியவர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாத வகையில் இங்கே வேட்டைத்திருவிழா யானையில் சுவாமி வலம்வந்து சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.