யாழில் நடமாடித் திரியும் இறந்த பெண்ணின் ஆவி! வீட்டில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல்!! (பரபரப்புக் காணொளி)

யாழ்.அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வீட்டின் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணொருவர் தானும் அந்த வீட்டில் இறந்துள்ளார்.

இறந்த பெண்ணின் வீட்டில் ஒவ்வொரு நாளும் மர்ம சத்தங்கள் கேட்பதும் வீட்டிற்குள் மண்ணை அள்ளித் தூவுவதும் ஜன்னல் கதவுகளை அடிப்பதும், புகை போன்ற உருவம் சத்தத்துடன் வருவதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

அதனை வீட்டின் உரிமையாளர் தனது தொலைபேசியில் நடுநிசி 1.00 மணியளவில் காணொளி எடுத்துள்ளார்.

எடுக்கப்பட்ட காணொளியில் உருவம் ஒன்று நாற்காலியை பல்வேறு கோணங்களில் சுழற்சியும் ஆட வைத்தும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Previous Post Next Post