யாழில் வீடொன்றில் சமூக சீர்கேடு: 2 யுவதிகளும், 4 ஆண்களும் கைது!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் 2 யுவதிகளையும், 4 ஆண்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (9) இவர்கள் கைது செய்யப்பட்டனர். யாழ் நகரப் பகுதிகளை அண்டிய இடங்களில் வீடுகளை நீண்ட நாள் குத்தகைக்கு எடுக்கும் சில சமூகவிரோதிகள் குறித்த வீடுகளில் பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

இளம் ஜோடிகள மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மணித்தியாலத்திற்கு என அறைகளை வாடகைக்கு விட்டு பெருமளவு சீர்கேடுகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இரண்டு யுவதிகளும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கைதான 4 ஆண்களும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

கைதான ஆண்களில் ஒருவர் நிதி நிறுவனமொன்றில் உயர் பதவி வகிப்பவர். கைதான இரண்டு யுவதிகளும் 30 வயதானவர்கள். பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்கள்.
Previous Post Next Post