யாழில் பிரபல தொழிலதிபர் கிருபாகரன் காலமானார்!

பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்தார்.

கிருபாகரன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்பாளராவார்.

கிருபா சாரதி பயிற்சிப் பாடசாலை அதிபரான அவர், வருமானம் குறைந்த மாணவர்களின் கல்வி வளர்சிக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்களிக்கு நிதியுதவி வழங்கி வந்தார்.
Previous Post Next Post