கிளிநொச்சியில் 11 வயதுச் சிறுவனுக்குக் கசிப்புப் பருக்கிய மர்ம நபர்கள்!

11 வயது பாடசாலை மாணவனுக்கு வலுக்கட்டாயமாகக் கசிப்பு பருகக் கொடுத்த சம்பவம் ஒன்று கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வன்னேரிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கே இவ்வாறு கசிப்பு பருகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விட்டு வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள் மறித்து, பலவந்தமாகக் கசிப்பு அருந்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய சிறுவனைக் கண்ட பெற்றோர்கள், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post