ஒரு கோடி ரூபாய் போதைப் பொருளுடன் இந்தியக் குடிமகன் கைது!

ஐஸ் போதைப் பொருளைக் கடத்த முற்பட்ட இந்தியக் குடிமகன் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.07 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருளை வியாபார நோக்கத்துக்காக எடுத்து வரப்பட்ட புடவைகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைத் தடுப்புப் பொலிஸாரினால் இன்று காலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

53 வயதுடைய இந்தியக் குடிமகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


Previous Post Next Post