சாவகச்சேரியில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து! எரிந்து நாசமாகியது இரண்டு கோடி!! (வீடியோ)

சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

சாவகச்சேரி ஏ-9 வீதியில் உள்ள வணிக நிலையத்தில் இந்தத் தீ வபத்து இன்று இரவு 6.45 மணியளவில் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

பரம்ஸ் என்ற மோட்டார் வாகனங்களின் உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினாலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய காரணத்தை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

Previous Post Next Post