மரண அறிவித்தல் - திருமதி புவனேஸ்வரி சதாசிவலிங்கம்

மண்டைதீவு 06 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி சதாசிவலிங்கம் 02.12.2019 அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் (முத்துலிங்கம்) சதாசிவலிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதாகர் (லண்டன்), சுஜாதா (லண்டன்), கவிதா (பிரான்ஸ்), திவாகர் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவகி (லண்டன்), சண்முகதாஸ் (லண்டன்), குமரகுருபரன் (பிரான்ஸ், நந்தினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வியாளாச்சி, லட்சுமி, மாரிமுத்து, கனகம்மா, விக்னராஜா, கண்மணி மற்றும் சிவகங்கை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் கனகலிங்கம்,

காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி, இராசலிங்கம், சுந்தரலிங்கம், பழனித்துரை, குமாரசாமி, சிவசம்பு மற்றும் யேகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவின், பிரசாயி, காருண்யா, அபிராம், ஜனகா, சாயித்தியா, தனுஷன், வர்மிஷன், பிரித்திகா, சயிஷன், தரணிகா, அர்ச்சிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 05.12.20109 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்ற பூதவுடல் மண்டைதீவ தலைகிரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புகளுக்கு,
+94 21 221 4732
+94 77 524 8549

Previous Post Next Post