காய்ச்சலின் கடுமையால் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா அம்பிகைபாகன் (வயது-64) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நேற்று முன்தினம் இவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று வண்ணார்பண்ணையில் உள்ள தனது தொழிலகமான பட்டறைக்குச் சென்றுள்ளார். மதியம் சாப்பிட்ட பின்னர் மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலை வெளியோறாளர் பிரிவில் அவரைப் பரிசோதித்த வைத்தியார்கள், அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.


Previous Post Next Post