சற்றுமுன் யாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கவைக்கழகத்தின் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த மகேந்திரம் யதுர்ஷனா (வயது-21)  என்ற யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

மல்லாகம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று இரவு இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கிளிநொச்சியிலிருந்து இன்று மாலை இவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது சகோதரியும் இவர் கூடவே வசித்து வருவதாகவும் அவர் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கல்விகற்று வருவதாகவும் இன்றைய தினம் அவர் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு வேளை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு ஏன் வெளிச்சம் போடவில்லை எனக் கூறிக் கொண்டு வீட்டைச் சென்று பார்த்தபோதே மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொல்லிப்பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என் கல்வி நிலையத்தில் முதல் முதலாய் 3A என்று என்னைப் பெருமை பேச வைத்தவளே..! 

உன் ஊருக்கே முதல் 3A என்று சொல்லும் போதெல்லாம் கண் சிமிட்டிச் சிரித்தவளே..! 

விஞ்ஞானப் பாடம் விளங்கவில்லை ஆர்ட்ஸ் படிக்கிறேன் அக்காவைப் போல என்னையும் கம்பஸ் அனுப்புங்க சேர் என்றாயே…! 

காலியிலே டெஸ்ட் மட்ச் பார்க்க நான் சென்றபோது சேர் ரீவில வருவார் என்று முழு மட்ச்சும் பார்த்தவளே..! 

என்ன நடந்தது உனக்கு? என் விழிகளை மூடித் திறக்கிறேன் உன் இலக்கணச் சந்தேகங்கள் கண் முன்னே வந்து போகிறது… 

நான் கம்பஸ் தானே அனுப்பினேன் பின்பு எங்கே சென்றாய்? 

என்ன ஆறுதல் சொல்வேன் உன் தாய்க்கும் குடும்பத்திற்கும்.. 

யதுர்ஷனா மகேந்திரன் 
2017 கிளி புனித திரேஷா பெண்கள் கல்லூரி 
யாழ் பல்கலைக்கழக மாணவி






Previous Post Next Post