ஏ-9 வீதியில் விபத்து! அதேயிடத்தில் இளைஞன் பலி!! (படங்கள்)

ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு-மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டிப் பகுதியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற இவ் விபத்தில் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா தர்ஷன் (வயது-20) என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார். 
 
Previous Post Next Post