யாழ்.-கொழும்பு விமான சேவை நாளை முதல் ஆரம்பம்! கட்டண விபரமும் வெளியீடு!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் யாழ்;.விமான நிலையத்திற்கும் இரத்மலானை விமான நிலையத்திற்கும் இடையிலான உள்நாட்டு விமான சேவையில் பிட் எயார் விமான சேவை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு இரத்மலானையில் இருந்து தினமும் 7.30 மணிக்குப் புறப்படும் இவ் விமானம் காலை 8.20 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

யாழ்ப்பாணத்திலிருந்து முற்பகல் 9.30 மணிக்குப் புறப்படும் விமானம் முற்பகல் 10.20 க்கு இரத்மலானையைச் சென்றடையும்.

விமானப் பயணத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அறவிடப்படுகின்றது. ஒரு பயணி கையில் 7 கிலோகிராம் எடை கொண்ட பொருட்களையும் 20 கிலோகிராம் எடை கொண்ட பயணப் பொதியையும் எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Previous Post Next Post