யாழில் கொரொனா தொற்றுச் சந்தேகநபர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்!!

முழு உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி வைரஸ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த நிலையில் தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து திரும்பிய இவர், சீன நாட்டவர்களுடன் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளார். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிரமப்படுவதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ்;ப்பாணம் பேதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவிருந்த நிலையில் நேற்று தலைமறைவாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்யும் பரிசோதனை வசதிகள் உள்ளன.

இதையடுத்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் நேற்று மாலை தலைமறைவானவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். எனினும் அவர் வீட்டில் இருக்கவில்லை. அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post