முல்லைத்தீவில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை!

முல்லைதீவு பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, மாங்குளம் பிரதேசத்திற்குட்பட்ட பாலைப்பாணி பகுதியிலேயே இச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியைச் சேர்ந்த ரஜி என்றழைக்கப்படும் ஜெயா (வயது-46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.

உள்ளுர் தயாரிப்பான இடியன் துப்பாக்கி மூலம் இவர் கொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற அதேவேளை நபர் அந்தப் பகுதியில் சிலருடன் முரண்பட்டுக் காணப்பட்டார் என்றும் தெரிய வருகின்றது.

கொலையானவரின் தலைப் பகுதியிலேயே காயம் காணப்படுவதாகவும் மனைவி கிளிநொச்சியின் பிரபல கல்லூரிப் பணிப்பாளர் என்று தெரிய வருகின்றது.

குறித்த நபர் கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியில் வசித்து வருவதாகவும் வயல் அருவி வெட்டும் இயந்திரம் வைத்திருப்பர் என்றும் அருவி வெட்டும் வேலைக்காகவே பாலைப்பாணியில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous Post Next Post