யாழில் நான்கு மாதப் பெண் குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணத்தில் நான்கு மாதப் பெண் குழந்தை ஒன்று வயிற்றோட்டம் காரணமாக உயிரிழந்துள்ளது.

தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.

நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த எமனேஸ்வரம் திருவிக என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு எட்டாம் திகதி திடீரென வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து குழந்தையின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்தனர்.

எனினும் குழந்தை இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post