திருநெல்வேலியில் யாசகம் செய்பவரிடம் பணத்தைப் பறித்துச் செல்லும் பரிதாபம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில் உள்ள மாடிப் படிகளில் இருந்து வயோதிபத் தாய் ஒருவர் யாசகம் செய்வதை அங்கு செல்பவர்கள் காணாமல் இருந்திருக்க முடியாது.

இருந்தும் குறித்த தாய்க்கு பண உதவிகள் செய்யப்படுகின்றதே தவிர நிரந்தரத் தீர்வாக, அவரின் உறவினர்களிடம் சேர்ப்பதற்கோ அல்லது உறவுகள் இல்லாத பட்சத்தில் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதற்கோ எவரும் முன்வரவில்லை.

குறித்த தாயிடம் சென்று கதைத்தபோது, சுய நினைவிழந்த, மாறாட்டமாக கதைப்பதோடு, உண்பதற்குக் கூட முடியாமல் படுத்த படுக்கையில் தவிர்த்துக் கொண்டிருக்கின்றார் என்பதை உணரக் கூடியதாக இருந்தது. அவரிடம் உங்கள் ஊர் எது என்று கேட்டதற்கு நாகர்கோவிலடி என்று பதில் அளித்திருந்தார்.

அத்துடன் தான் பஸ்ஸில் வைத்தியசாலைக்கு வந்ததாகவும், பின்னர் திருநெல்வேலிக்கு வந்ததாகவும் கூறுகின்றார். தனக்கு எழும்பி இருக்க முடியாமல் இருப்பதாகவும், தலை பாரமாக இருப்பதாகவும் தெரிவித்த அந்த அம்மா, தேனீர் கூட அருந்த முடியாத நிலையில் தற்போது காணப்படுகின்றார்.

இதேவேளை சந்தைக்கு வரும் சிலர் அந்த அம்மாவின் நிலையைப் பார்த்து பண உதவி செய்து வருகின்றனர்.

இருந்தும் இந்த அம்மா தொடர்பில் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, இந்த அம்மாவுக்கு எவரும் பண உதவி செய்ய வேண்டாம் என்றும், அவரின் பேரன் முறையான சின்ன பையன் வந்து இவரிடம் இருக்கும் பணத்தைப் பறித்து செல்வதுடன், இந்த அம்மாவும் பணத்தைப் பேரனுக்கு கொடுப்பதாகவும் கூறினார். அத்துடன் இவர் திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசிப்பதாகவும் இன்னொருவர் தெரிவித்தார்.

இருந்தும், அம்மாவின் கதைகளைப் பார்த்தால் அவர் நடிப்பது போலவோ, அல்லது யாசகம் பெறும் நோக்கில் இருப்பது போலவோ தெரியவில்லை.
உடல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றார்.

உண்மையில் இந்த அம்மாவை வைத்து பணம் சேகரிக்கின்றார்களா? அல்லது இந்த அம்மா பெற்றுக் கொள்ளும் யாசகத்தை யாரும் பறித்துச் செல்கின்றார்களா? என்பது தொடர்பில் தெரியவில்லை.

இந்த உலகில் மனிதம் மரணித்து விட்ட நிலையில் அனைத்தும் கடந்து போகும் சூழ்நிலையில் இதுவும் கடந்து போகும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

எனவே இந்த அம்மாவை அவரின் உறவினர்களுடன் சேர்க்கும் வரை அல்லது முதியோர் இல்லங்களில் சேர்க்கும் வரை இப் பதிவை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்பதுடன், இது சம்பந்தமாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி :-  Kuganesan Saravanamuththu

Previous Post Next Post