இலங்கையில் வேகம் கொண்டது கொரோனா! சிறுமி உட்பட 10 பேர் பாதிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.

இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய 56 வயதுடைய பெண் ஒருவருக்கும் முன்னைய நோயாளியின் உறவினரான 17 வயதுடைய சிறுமி ஒருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தொற்று நோயியல் (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் 107 கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 17 வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட நான்கு தடுப்பு நிலையங்களில் ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

Previous Post Next Post