13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்! 33 வயது இளைஞன் கைது!!

வவுனியாவில் 15 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 33 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கற்பகபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயார் வேலைக்கு சென்றிருந்த போது வீட்டில் எவரும் இல்லாத நிலையில் 15 வயது சிறுமி ஓருவர் பல தடவை வீட்டில் தனிமையில் நின்றுள்ளார்.

இதன்போது குறித்த வீட்டாருடன் முன்னரே அறிமுகமான குறித்த இளைஞர் வீட்டுக்கு வந்து குறித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக தாயாரால் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிசார் சிறுமியை அழைத்து மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் வாரிக்குட்டியூர் 5 ஆம் யுனிற்றை சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரை நேற்று (15) கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர்.

இதன்போது குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Previous Post Next Post