மூடப்பட்டது ஏ-9 வீதி!

யாழில் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏ 9 வீதி மூடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தற்காலிக அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.
Previous Post Next Post