தீவகம் உட்பட யாழில் பல வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் 128 வீதிகள் சீரமைக்கப்படவுள்ளது. இந்தச் சீரமைப்புப் பணிகளை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் இன்று ஆரம்பித்து வைக்கின்றார்.

ஐ ரோட் திட்டத்தின் கீழ் 15 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த 128 வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன.

15 பிரதேச செயலக பிரிவுகளிலும் மொத்தம் 273.24 கிலோ மீற்றர் நீளமுடைய வீதிகள் இத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படவுள்ளன.

அந்தவகையில்,

 1. நுணாவில்-சரசாலை வீதி 
 2. மாமுனை-கட்டைக்காடு வீதி
 3. மந்திகை-தம்பசிட்டி-அல்வாய் வீதி
 4. உடுப்பிட்டி-மாலு சந்தி – அல்வாய் வீதி
 5.  தெல்லிப்பளை திட்டி வீதி, தும்பளை வீதி
 6. பிராம்பத்தை – பண்டத்தரிப்பு வீதி
 7. மூளாய் வீதி
 8. பாலவோடை – ஊரி வீதி
 9.  ஊரெழு – நீர்வேலி வீதி
 10. பிறோன் வீதி
 11. இராசாவின் தோட்ட வீதி
 12. மண்கும்பான் சாட்டி – வேலணை வீதி
 13. ஊர்காவற்றுறை – சுருவில் - சரவணை வீதி 

ஆகியன இன்று சம்பிரதாயபூர்வமாக சீரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.

Previous Post Next Post