பிரித்தானியாவில் யாழ்.குடும்பத்திற்கு கொரோனா தொற்று! தனிமைப்படுத்தப்பட்டது குடும்பம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Southall நகரில் வசிக்கும் குறித்த குடும்பத்தினரே இவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு டாக்ஸ்சி சாரதி தனக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதாகக் கூறி 111 க்கு அழைத்துள்ளார். அவரை உடனே வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அழைத்துள்ளார்கள்.

வைத்தியசாலைக்குச் சென்று பல மணி நேரம் காத்திருந்த பின்னரே அவரை வைத்தியர்கள் பரிசோதித்துள்ளனர். அதன் பின்னர் டாக்ஸ்சி சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.

இதேவேளை அவர் கடைசியாக ஏற்றி இறக்கிய பயணி யார் என்று பொலிஸார் விசாரித்ததன் பின்னர் குடும்பத்தில் தந்தைக்கு கொரோனா தொற்றிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த கணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதன் பின்னர், மனைவிக்கும் 3 நாட்கள் காய்ச்சலின் பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பினும் மகன், மகள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்களுடனான தொடர்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 321 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post