யாழில் விபத்து! இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் - கொழும்புத்துறை கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 20 ஆம் திகதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடற்கரை வீதி குருநகர் பகுதியினைச் சேர்ந்த ஜோன்சன்வலன்சன் ஜெகதீஸ்வரி (வயது-42) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.

Previous Post Next Post