வீதியெங்கும் வழிந்தோடிய சாராயம்! மனவருத்தத்தில் மதுபானப் பிரியர்கள்!! (படங்கள்)

மதுபானப் போர்த்தல்களை ஏற்றி வந்த லொறியின் பின் கதவு எதிா்பாராத விதமாகத் திறந்ததால் வீதியெங்கும் மதுபானம் வழிந்தோடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரி சுற்று வட்டத்தின் முன்னால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று மதுபானம் ஏற்றிவந்த லொரியானது அதன் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்ததில் லொறியின் உள்ளிருந்த மதுபான போத்தல்கள் வீதியில் விழுந்து உடைந்து நொறுங்கின. இதனால் பியர் வெள்ளமாக வீதி மாறியது.

லொறியின் பின் கதவு திறந்ததில் அதன் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதுண்டு காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேறு எவருக்கும் பெரும் பாதிப்பு இல்லாத நிலையில் இது தொடர்பான விசாரணையினை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


 


Previous Post Next Post