யாழில் வளர்ப்பு மீன் விற்பனை நிலையங்களால் வரும் ஆபத்து! பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம்!!

உலகத்தை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பில் நாம் அறிந்திருந்தும் அது தொடர்பில் அலட்டிக் கொள்வதில்லை. வெளிநாட்டில் தானே என்ற அசண்டையீனம் இறுதியில் எம்மையும் தாக்குவதற்கு வழி ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு மீன்கள் விற்பனை செய்யும் கடைகளிலிருந்தும் வைரஸ் பரவுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட முழுமையான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

“எனது பேர்த்தி வீட்டில் வளர்ப்பதைப் பற்றி நீண்ட நாட்களாகவே கனவு கண்டுகொண்டிருந்தாள். அவளது பிறந்ததினத்துக்கு வாங்கித் தருவதாக அவளது தந்தை அதாவது எனது மகன் சொன்னைத் தொடர்ந்து அதனை அவளுக்கு வாங்கிக் கொடுப்பதற்காக யாழ்.நகரில் உள்ள ஒரு வளர்ப்பு மீன்கள் விற்பனை செய்யும் கடைக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். மீன் ஒன்றும் வாங்கவில்லை. ஆனால் பார்த்து விட்டு வந்துவிட்டனர்.

மறுநாள் அவளுக்குக் காய்ச்சல் காயத் தொடங்கியது. தொடர்ந்து தொண்டை நோவதாகச் சொன்னாள். காய்ச்சல் சற்று அதிகமானதும் அவளை வைத்தியரிடம் காட்டி மருந்தெடுத்தோம். கிருமித் தொற்றே காய்ச்சலுக்குக் காரணம் என்றார் வைத்தியர்.

அன்றிரவு எனது உறவினரான இன்னொரு வைத்தியர் எங்கள் வீட்டுக்கு வந்தார். பிள்ளைக்குக் காய்ச்சல் என்றதும் அவர் பலதையும் விசாரித்தார். வளர்ப்பு மீன் விற்பனை செய்யும் கடைக்குப் போய் வந்த கதையையும் சொன்னோம்.

தற்போது வளர்ப்பு மீன் விற்கும் கடைகளில் பல விலங்குகளும், பறவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சிறிய காற்று அதிகம் இல்லாத அடைத்த இடத்தில் மிகவும் நெருக்கமாக கூடுகளில் அடைத்து வைக்கப்பட்டு அவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த இடத்துக்குப் போய் வந்தாலும் நோய்த் தொற்றுக்கு ஆளாக வேண்டிவரும் என்று அவர் சந்தேகம் வெளியிட்டார்.

அவர் அப்படிச் சொல்லிய பின்பு நான் அந்தக் கடைகளைச் சென்று பார்த்தேன். பின்னர் எனது நண்பரான ஒரு வைத்திய அதிகாரிக்கும் இதனைச் சொன்னேன்.

பிற நாடுகளில் இதுபோன்ற கடைகளை அமைத்து உயிரினங்களை விற்பனை செய்வதற்கு சில வழிமுறைகள் உண்டு என்றும், அதுபோன்று இங்கும் சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றனவா? அது சார்ந்த திணைக்களங்களின் அனுமதி பெறப்படுகின்றதா? என்று ஒன்றும் தெரியவில்லை.

பலவிதமான உயிரினங்கள் அங்கே விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் அவைக்கான உணவு வகைகளையும் அவர்கள் விற்பனை செய்கின்றனர். அதனையும் மக்கள் வாங்கிக் கொண்டு போவதைக் கண்டேன்.

தொற்று என்பது சொல்லிக் கொண்டு வருவதில்லை. ஒரு காலத்தில் நாங்கள் சிக்குன்குனியாவால் அவதிப்பட்டது தெரியும் அல்லவா? இப்போது சீனாவில் பரவுகின்ற கொரோனா வைரஸ் கூட மிருகங்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகச் சொல்லுகிறார்கள்.

அந்தவகையில் பார்த்தால், மேற்குறிப்பிட்ட வளர்ப்பு மீன், பறவைகள், விலங்குகள் என்பவற்றை விற்பனை செய்யும் அந்தக் கடைகளிலிருந்தும் நோய்த் தொற்று ஆரம்பிக்கலாம் என்று சந்தேகமாக இருக்கின்றது.

கடைகளுக்குள் நாற்றம் தாங்க முடியவில்லை. பார்த்தால் குடும்பத்தோடு மக்கள் அந்தக் கடைகளுக்குள் நிற்கின்றார்கள். இதுபோன்ற இடங்களுக்கு விற்பனை நிலைய அனுமதி வழங்குபவர்கள் அவை சரியான வழிகளில் சுத்தமான இடத்தில் இயங்குகின்றனவா? எனப் பார்க்க வேண்டும்.

ஒரு நுளம்புக் குடம்பி கிடந்தாலே துள்ளிக் குதிக்கும் எமது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவற்றை கவனித்து நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்களா?” என்று அவர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே இவ்விடங்களுக்கு குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அழைத்துச் செல்வதை முடிந்தவரை நிறுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post