நாடாளுமன்றத் தேர்தல்! பிற்போடப்படும் சாத்தியம்?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை அதே தினத்தில் நடத்துவது குறித்து அரசுக்கு நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

இதன் காரணமாகப் பொதுத் தேர்தலை பிற்போட்டு பிறிதொரு தினத்தில் நடத்துவது குறித்து தீர்மானிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சுகாதார அமைச்சு மட்டத்திலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பொதுத் தேர்தலை குறித்த தினத்தில் நடத்துவதா? அல்லது பிறிதொரு தினத்திற்கு மாற்றுவதா? என்பது பற்றியும், பொதுக் கூட்டங்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது, அல்லது அவற்றை நடத்தவிடாது தடை செய்வது குறித்தும் முக்கிய தீர்மானங்களை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தேர்தலைப் பிற்போடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
Previous Post Next Post