பொது விடுமுறை நீடிப்பில்லை! அரசு அறிவிப்பு!!

பொது விடுமுறையை நீடிக்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது. இன்று மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை அரசஇ வங்கி, வர்த்தக விடுமுறையாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும் அதனை நீடிக்க அரசு தீர்மானிக்கவில்லை என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“கோரோனா வைரஸ் தொற்று தொடர்பான அச்சநிலையைக் கட்டுப்படுத்த இன்று பொது விடுமுறை தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும் பொது விடுமுறை தொடர்பில் இந்த வார இறுதியிலேயே தீர்மானம் எடுக்கப்படும்” என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post