பிரான்ஸில் கத்திக் குத்துத் தாக்குதல்! இருவர் பலி!! பலர் படுகாயம்!!

பிரான்ஸில் தென்கிழக்குப் பகுதியில் இனந்தெரியாத நபா் ஒருவா் கத்தியால் குத்தியதில் இருவா் உயிரிழந்துள்ளதுடன், ஏழு போ் படுகாயமடைந்துள்ளனா்.

அத்துடன் ஒருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இச் சம்பவம் இன்று காலை (04) Drôme  Romans-sur-Isere நகரில் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டவனை 11h00 மணியளவில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர் இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது பற்றி இன்னமும் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

கத்திக்குத்தை மேற்கொண்டவனிற்கு 33 வயது என்றும் உடனடியாக தேசியப் பயங்கரவாதத் தடைப்பிரிவின் நீதிமன்றம் இந்தத் தாக்குதலிற்காக மேலதிக விசாரணைகளிற்கு ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதலாளியிடம் எவ்வித அடையாள தாள்களும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலில் சிகரெட் விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சிகரெட் விற்பனை நிலைய நிர்வாகிகள் இருவரை தாக்கிய நபர், பின்னர் அங்கிருந்து வெளியேறி வீதியில் சென்றவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளான்.

பின்னர் La Mie Câline எனும் வெதுப்பகத்துக்குள் நபர் ஒருவரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளான். அதன் பின்னரே அவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட தாக்குதலாளி சூடான் நாட்டைச் சேர்ந்தவன் என அறிய முடிகிறது.
Previous Post Next Post