கொரோனாத் தொற்று! ஊடகவியலாளரான ஈழத் தமிழன் லண்டனில் பலி!!

உலக நாடுகளில் கட்டுக்கடங்காது பரவி, பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ்.

அந்தவகையில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.

லண்டன், பிரான்ஸ் மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இவ் வைரஸ் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிர் இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில், பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகனும்,  ஊடகவியலாளருமான ஆனந்தவர்ணன் (வயது-30) கொரோனாத் தொற்றுக் காரணமாக  லண்டனில் இன்று காலமானார்.
ஆனந்தவர்ணன், ரிரிஎன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.

அத்துடன் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தாா்.

இதேவேளை நேற்றைய தினம் பிான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31)  என்ற இளம் குடும்பப் பெண்ணும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்திருந்தாா்.

இக் கொரோனா வைரஸினால் அண்மைக் காலமாக புலம்பெயா் தேசங்களில் வாழும் ஈழத் தமிழா்கள்  இளவயது மரணங்களைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post