அதீத காய்ச்சலால் வைத்தியசாலைக்குச் சென்ற திருநங்கைக்கு நடந்த கதி! (வீடியோ)

உலக அளவில் கொரோனாத் தொற்று பலநாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாத் தொற்றில் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தோரின் தனிமைப்படுத்துதலும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

ஈரோட்டைச் சேர்ந்த திருநங்கை ஆயிஷா பாத்திமா கடந்த சில தினங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் தவித்து வந்த இவருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி ஆகியவையும் இருக்க தனக்கு கொரோனாவாக இருக்குமோ என அச்சத்தோடு மருத்துவமனைக்குப் போயிருக்கிறார் அந்த திருநங்கை.

ஆனால் அவரை சிகிட்சைபெற மருத்துவமனைக்குள் அனுமதிக்காத போலீஸார் அவரிடம் செத்துவிடு எனவும் கடுமை காட்டியுள்ளனர். இதை கண்ணீரோடு வீடியோவாக வெளியிட்டிருக்கும் அந்த திருநங்கை, நான் கொரோனாவால் சாவது ஒன்றும் எனக்கு பிரச்னை இல்லை. ஆனால் என்னால் இது மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதால் தான் வீடியோ பதிவிடுகிறேன்’ என அழுதுகொண்டே கூறியுள்ளார்.
Previous Post Next Post