லண்டனில் கொரோனா! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு!!

உலகத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இலட்சக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்துள்ளது.

இந் நிலையில் புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இரு தினங்களுக்கு முன்பாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவன் ஆவார்.

Previous Post Next Post