யாழில் 5 சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி! ஒருவர் மீண்டும் கைது!! (படங்கள்)

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடுமுழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததால் அந்தக் கைதி மீளவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர், தற்போதைய ஊரடங்கு நடைமுறையால் சிறைச்சாலை வாகனத்தில் அவர்களத்து சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடப்படவுள்ளனர்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 31ன் கீழ் பெரும்குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சிறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், தண்டம் செலுத்த முடியாத கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்.



Previous Post Next Post