பிரான்ஸ் அரசின் திருகுதாளம்! உள்ளிருப்பு நீக்கத்துக்காகக் குறைத்துக் காட்டுப்படும் உயிரிழப்புக்கள்? (வீடியோ)

நாளை திங்கட்கிழமை (மே11) பொதுமுடக்கம் கட்டுப்பாடுகளுடன் நீக்கம் செய்யப்படவுள்ள நிலையில், "கொரொனாவுடன் வாழப் பழகுவோம்" என கூறிவரும் அரசாங்கம், உயிரிழப்புகளின் எண்ணிக்கையினை குறைந்து தெரிவிக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் அறிக்கையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகியவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருந்தது.

மருத்துமனைகளில் 76 பேரும், மூதாளர் இல்லங்களில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் மருத்துவமனைகளில் 22 614 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு, புதிதாக 433 போ் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த ஞாயிறு 96 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்களன்று 243பேர் சடுதியான உயர்வு காணப்பட்டிருந்தது. தொடர்ந்து செவ்வாய் 234, புதன் 177, வியாழன் 149, வெள்ளி 111 அமைந்திருந்தன.

இந்நிலையில் பொதுமுடக்க நீக்கத்துக்கு இன்னமும் ஒரு நாளே இருக்கின்ற நிலையில், மக்களை வைரசோடு வாழப்பழக வைக்கும் யுத்தியாக, மக்களின் மனஅச்சத்தை குறைப்பதற்கு, உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளதாக என்ற கேள்வியினை பலரும் எழுப்பியுள்ளனர்.

அரசாங்க தரப்பில் இருந்து இதற்கான தெளிவான பதிலைக் காணதபோதும், மேலும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் நீடிக்கபட வேண்டிய கட்டாயம் பிரான்சுக்கு உள்ளதென சுகாத்துறை அறிஞர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

காரணம், புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கணிசமாக காணப்படுவதோடு, மருத்துவமனைகளில் இன்னமும் சுகாதார நெருக்கடி குறையவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக அரசாங்கம் சிவப்பு பிராந்தியமென அடையாளப்படுத்தப்பட்ட பிராந்தியங்களில் மருந்துவமனைகளில் நெருக்கடி நீடித்தே வருகின்றது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 138 854ஆக பதிவாகியுள்ளதோடு, 26 310 பேர் உயிரிழந்துள்ளனர். 56 038பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு பொருளதார நெருக்கடியின் தொடக்கத்தில் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்த அதிபர் ஏமானுவல் மக்ரோன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு பொதுமுடக்கத்தை நீக்கம் செய்து தேசமாக எழவேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் பொருளதாரத்தினை விட சுகாதாரதமே முக்கியமானதென 53ம% வீதமான பிரென்சு மக்கள் கருத்துக் கணிப்பொன்றில் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post