க.பொ.த. உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுகின்றது?

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படலாம் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி பரீட்சை நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாடசாலைகள் பூட்டப்பட்டதால், பாட உள்ளடக்கங்களை குறைத்து வினத்தாள் தயாரிக்கப்படலாமென முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் பரீட்சை வினாத்தாள் தரத்தை குறைக்க வேண்டாம் என்று பல தரப்புக்களும் கல்வியமைச்சிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி புதிய திகதியை தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்