பிரான்ஸில் RER B ரயில் தடம்புரண்டதால் பாரிய போக்குவரத்துத் தடை! (படங்கள்)

பிரான்ஸில் RER B தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது. இதனால் பாரிய போக்குவரத்துத் தடையை சந்திக்க நேரிரும் என RATP அறிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடா்பில் தெரிய வருவதாவது,

நேற்று  RER B தொடருந்து விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக இதில் எவரும் காயமடையவில்லை. நேற்று புதன்கிழமை மாலை 7 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றது.

இது தொடர்பாக RATP தெரிவிக்கையில், Denfert-Rochereau நிலையத்தில் இருந்து தொடருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், விபத்துக்குள் சிக்கியது. RER B தொடருந்தின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.  அதைத் தொடர்ந்து Laplace மற்றும் Port Royal நிலையங்களுக்கிடையே போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.அதேவேளை, Gare de Nord தொடருந்து நிலையத்துக்கான 'உள்ளக தொடர்பும்' (L’interconnexion) பகுதியும் தடைப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து RER B சேவை இன்று வியாழக்கிழமை பாரிய போக்குவரத்து தடையை சந்திக்க நேரிடும் என RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் வரையான மக்கள் இதில் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்