உதயன் பத்திரிகைப் பிரதிகளை இலவசமாக வழங்கிய சுமந்திரன்! (படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டின் பிரதிகளை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது.


கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கிவைத்தார்.

சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரதான தலைப்பிட்ட செய்தி இன்று வெளயிடப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைச் செய்துள்ளார்.
Previous Post Next Post