யாழில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி 9 மாத பெண் குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.  அனலைதீவு 4ஆம் வட்டாரத்தில் இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது.

தயாளன் விதுசா என்ற 9 மாத குழந்தையே உயரிழந்தது. நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு வீட்டினுள் இருந்து மின்சார வயர் இணைக்கப்பட்டிருந்தது.

தவழ்ந்து சென்ற குழந்தை மின்சார வயரை இழுத்துள்ளது. இதன்போது மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்தது.
Previous Post Next Post